Monday, October 04, 2004

நைபால்: கால வரிசை

1932: ஆகஸ்ட் 17, ட்ரினிடாடில் தோற்றம். ஸ்ரீப்ரசாதின் இரண்டாவது
குழந்தை.
1948: ட்ரினிடாட் அரசாங்கத்தின் ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது.
1950: ஆக்ஸ்·போர்ட் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படிக்க செல்கிறார்.
1955: பாட்ரீசியா ஆன் ஹேலை மணமுடிக்கிறார்.
1956: முதல் முறையாக தாய்நாடு, ட்ரினிடாடுக்கு ஒரு சிற்றுலா.
1957: முதல் புத்தக வெளியீடு
1958: தி மிஸ்டிக் மசூர், 'ஜான் லெவளின் றைஸ்' நினைவுப் பரிசு பெறுகிறது.
1960: அரசாங்க உதவித்தொகை கிடைத்ததனால் மீண்டும் ட்ரினிடாட் வருகை;
'தி மிடில் பாஸேஜ்' எழுத ஆரம்பிக்கிறார்.
1961: மிகுவேல் ஸ்ட்ரீட் 'சொமர்செட் மௌகம் பரிசு பெறுகிறது.
1962: ஒரு வர்ஷத்துக்கு இந்தியாவை சுற்றி வந்து 'இருண்ட பிரதேசம்'
எழுதத் துவங்குகிறார்.
1964: மிஸ்டர் ஸ்டோன் அண்ட் தி க்னைட்ஸ் கம்பானியன் 'ஹாதோர்ண்டன் பரிசு'
வெல்கிறது.
1968: தி மிமிக் மென் 'டபிள்யூ. ஹெச். ஸ்மித் பரிசு' வாங்கிக் கொள்கிறது.
1970: மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, கனடா சுற்றி விட்டு
இங்கிலாந்து திரும்புகிறார்.
1978: அமெரிக்காவின் கனெக்டிகட் வெஸ்லேயன் கல்லூரியில் பாட புத்தகத்தை
பயிற்றுவிக்க ஆரம்பிக்கிறார்.
1979: ஈரானுக்குக் அதை சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளுக்கும் பயணம்.
1987: யு.எஸ்.ஏ.வின் தென் மாகாண சுற்றுப்பயணம்.

No comments: